தண்ணீர் தொட்டியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி


தண்ணீர் தொட்டியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 18 March 2022 2:48 AM IST (Updated: 18 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியானான்.

மேச்சேரி:-
மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் பாரப்பட்டியை சேர்ந்தவர் அமீர். இவரும் சேலம் வ.உ.சி. மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவரும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சேலம் கடைவீதி திப்பு சுல்தான் மார்க்கெட் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் இப்ராகிம் (வயது 5). கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மா தனது மகனுடன் பாரப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இப்ராகிம் திடீரென மாயமானான். இதனால் அவனை ரேஷ்மா தேடியபோது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் கிடந்தான். உடனடியாக அவனை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story