சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்; இன்று நடக்கிறது
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது.
தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகள்
இதில் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.
இந்த தேர் வடக்கு ராஜவீதி சந்திப்பான குமரன் சதுக்கத்தில் நிறுத்துகிறார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.அன்னக்கொடி, கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story