ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ்
சுசீந்திரம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சந்தானம் (வயது82). இவர் சம்பவத்தன்று சுசீந்திரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். நல்லூர் பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. பஸ்சில் யாரோ மர்ம நபர் பறித்து சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்ஆஷாஜெபகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----
Related Tags :
Next Story