பெங்களூருவில் ரவுடியை கொல்ல முயன்ற 4 பேர் கைது


பெங்களூருவில் ரவுடியை கொல்ல முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2022 2:59 AM IST (Updated: 18 March 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரவுடியை கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிவகங்கா மடத்தின் ரோட்டில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 4 பேரும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் ரவுடி ஜலான் என்பவரின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. ஜலானுக்கும், ரவுடி ராகுலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து சிறையில் இருந்தபடியே தனது கூட்டாளிகள் 4 பேரிடமும், ரவுடி ராகுலை கொலை செய்யும்படி ஜலான் கூறியதாக தெரிகிறது.

  அதைத்தொடர்ந்து ராகுலை கொலை செய்ய திட்டமிட்டு 4 பேரும் வி.வி.புரம் அருகே சிவகங்கா மடம் ரோட்டில் ஆயுதங்களுடன் நின்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story