ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகர்கோவில் வட்டாரக்கிளை சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் வட்டாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்துக்கான ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ஷேக்முஜிபர் தலைமை தாங்கினார். செயலாளர் மார்ட்டின் பிரேம் சுந்தர் வரவேற்று பேசினார். முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆதித்தன் தொடக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் விளக்க உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் முரளீதரன் நிறைவுரையாற்றினார். முடிவில் லீலா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
---
Related Tags :
Next Story