மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 1,000 டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது


மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 1,000 டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 18 March 2022 3:55 AM IST (Updated: 18 March 2022 3:55 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் 1,000 டன் நெல் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை      உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்திற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நெல் மூட்டைகள் மயிலாடுதுறையில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமணைக்கு வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து ரெயிலில் வந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர். பின்னர் நெல் மூட்டைகள் ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்ட பின்னர், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story