பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குமரியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 87 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குமரியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 87 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாகர்கோவில்:
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு
குமரியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 87 சிறப்பு பஸ்கள் இயக்கபடுகிறது.
பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் இன்று வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். அதேபோல் இங்குள்ள மக்கள் வெளி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு செல்வார்கள். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 87 சிறப்பு பஸ்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
அதாவது நாகர்கோவிலில் இருந்து நெல்லை மாவட்டம் சித்தூருக்கு 22 சிறப்பு பஸ்களும், திருச்செந்தூருக்கு 15 பஸ்களும், உவரிக்கு 15, சாத்தான்குளத்திற்கு 5, மதுரைக்கு 15, நெல்லை மாவட்டத்துக்கு 15 என மொத்தம் 87 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும்.
----
Related Tags :
Next Story