ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தி வந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
ஆந்திராவில் இருந்து வரும் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருகின்றனர். இதைத் தடுக்க காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ரெயில் பணிகள் இருக்கைக்கு அடியில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story