இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
மும்பை காந்திவிலி பாபாசாகேப் அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பதிவேடு ஊழியராக மிலிந்த் குமார்(வயது54) என்பவர் இருந்து வந்தார். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த நபர் சகோதரரின் இறப்பு சான்றிதழ் பெற மருத்துவ பதிவேடு அலுவலகம் சென்று விண்ணப்பித்தார்.
இதனை பரிசீலனை செய்த மிலிந்த் குமார் விண்ணப்பத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், இதனை சரி செய்ய வேண்டுமெனில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டு உள்ளார்.
போலீசில் சிக்கினார்
இதனால் அவரிடம் நடத்திய பேரத்தில் ரூ.4 ஆயிரம் தருவதாக தெரிவித்தார். பின்னர் பணம் கொடுக்க விரும்பாத நபர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் கொடுத்த யோசனைப்படி கடந்த 15-ந்தேதி இரவு ஊழியர் மிலிந்த் குமாரை சந்தித்து ரூ.4 ஆயிரத்தை அந்த நபர் கொடுத்தார்.
பணத்தை பெற்ற போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மிலிந்த் குமாரை பிடித்து கைது செய்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story