ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம்


ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 18 March 2022 5:20 PM IST (Updated: 18 March 2022 5:20 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே ஏரிகள் ஆக்கிரமிப்பு அகற்றம்

வேட்டவலம்

வேட்டவலத்தை அடுத்த சொரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலியாங்குப்பம் ஏரி, கல்லாய் சொரத்தூர் ஏரி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. 

இப்பணியில் கீழ்பென்னாத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலட்சுமி மற்றும் வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் அல்லி, குறு வட்ட நில அளவர் சென்னையன், 

ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதம் பழனி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் இளவரசன், கிராம உதவியாளர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். 

அதில் 35 பேரிடம் இருந்து 10 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டது.

Next Story