முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 100 பேர் மீது வழக்கு
திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, மார்ச்.19-
திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க.வை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கியதாக அளித்த புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு அவர் திருச்சியில் 2 வாரகாலம் தங்கி இருந்து வாரத்துக்கு 3 நாட்கள் வீதம் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் கடந்த திங்கள், புதன்கிழமைகளில் கையெழுத்து போட்டார்.
100 பேர் மீது வழக்கு
அப்போது சட்டவிரோதமாக கூடுதல், கொரோனா விதிமுறையை மீறி கூட்டம் கூட்டியது, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் ஜெயக்குமார் 3-வது முறையாக இன்று காலை கையெழுத்து போட வந்தார். அப்போது போலீஸ் நிலையம் முன்பு உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
ஜெயக்குமார் மற்றும் ஒரு சிலரை மட்டும் கையெழுத்து போட போலீஸ் நிலையத்துக்குள் அனுமதித்தனர். மற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் காழ்ப்புணர்ச்சி
கடந்த முறை கையெழுத்துபோட வந்தபோது, கொரோனா விதிமுறையைமீறி கூட்டம் கூட்டியதாக என் மீது தொடரப்பட்ட வழக்கு பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பொதுவாக ஒரு கட்சியின் தலைமை நிர்வாகிகளோ, முக்கிய நிர்வாகிகளோ வரும்போது தொண்டர்கள் எழுச்சியோடு கூடுவது என்பது காலங்காலமாக உள்ளது.
ஆனால் இதைக்கூட ஜீரணிக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தநேரத்தில் 10 ஆயிரம்பேர் கூடும்போது, கொரோனா பரவாதா?. எங்கள் தொண்டர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் எழுச்சியோடு வருவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
லேபிள் ஒட்டுகிற வேலை
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தும். ஆனால் இங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சென்று சந்திப்பார். கவர்னருக்கான அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் தனது கடமையை செய்து வருகிறார். தி.மு.க. அரசின் பட்ஜெட்டை பொறுத்தவரை, இவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைகண்டிப்பாகநிறைவேற்றப்போவதில்லை. வழக்கம்போல அல்வா கொடுக்கும் வேலையை தான் செய்ய போகிறார்கள். எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்துக்கு லேபிள் ஒட்டுகிற வேலையை தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story