6 இலங்கை மீனவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்
எல்லைதாண்டி வந்து கைதான 6 இலங்கை மீனவர்கள் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரும் விசாரணைக்கு பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.
ராமநாதபுரம்,
எல்லைதாண்டி வந்து கைதான 6 இலங்கை மீனவர்கள் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரும் விசாரணைக்கு பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.
ரோந்து
தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பலில் இந்திய கடல் எல்லைக்குள் கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 117 கடல்மைல் தொலைவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் எல்லைதாண்டி வந்த இலங்கையை சேர்ந்த தினுகா புத்த-6 என்ற கப்பலை கண்டு மடக்கி நிறுத்த முயன்றனர். படகினை விரட்டி மடக்கி பிடித்தபோது அதில் இலங்கை மீனவர்கள் 6 பேர் இருந்தது தெரிந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இலங்கை கந்தரா பகுதி தயானந்த மகன் தினேஷ் சதுரங்க (வயது32), நந்தசெவன நிமால்ஸ்ரீ மகன் பசிந்து (18), ரஞ்சித் மாகேனவத்த மகன் பட்டிய கும்புரகே ரவிஷ்க் அஞ்சன (19), சரத் மகன் ரோசன் (24), கபுகம தெவிநுவர பகுதி அனுரசிரி மகன் சவுந்திர ஹென்னதிகே அவிஸ்க தில்சான் (22), தயானந்த மகன் பூவளு பட்டபெந்திகே ஓசான் மேலக (24) ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் அனைவரும் படகுடன் தூத்துக்குடி தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உத்தரவு
இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் 6 பேரும் நேற்று பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் முதன்மை குற்றவியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கவிதா 6 மீனவர்களையும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 6 மீனவர்களும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story