முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆறுமுகநேரி:
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்ற முடிவை கண்டித்தும் காயல்பட்டினம் சீதக்காதி திடலில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் எம்.எம்.சம்சுதீன் ஹாஜி தலைமை தாங்கினார். அனைத்து இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர், முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹாப், தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. பொருளாளர் காயல் அமானுல்லா ஆகியோர் பேசினா்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, என்.டி.எப், ஐ.என்.டி.ஜே, ஒய்.எம்.ஜி. ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story