மழைவேண்டி பீமன் வேடம் அணிந்து இளைஞர்கள் வீதிஉலா


மழைவேண்டி பீமன் வேடம் அணிந்து இளைஞர்கள் வீதிஉலா
x
தினத்தந்தி 18 March 2022 6:32 PM IST (Updated: 18 March 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

தாளையடிகோட்டை கிராமத்தில் பங்குனி திருவிழாவையொட்டி மழை வேண்டி இளைஞர்கள் பீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்தனர்.

நயினார்கோவில், 
தாளையடிகோட்டை கிராமத்தில் பங்குனி திருவிழாவை யொட்டி  மழை வேண்டி இளைஞர்கள் பீமன் வேடம் அணிந்து வீதி உலா வந்தனர்.
பங்குனி திருவிழா
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் மற்றும் தாளையடி கோட்டை கிராமத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி பால்குடம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி ஏந்தியும், வேல் குத்தியும் பால்குடம் எடுத்து அம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர். 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து தாளையடி கோட்டை கிராமத்தில் மழை வேண்டி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உடம்பு முழுவதும் கரி பூசிக்கொண்டு பீமன் வேடம் அணிந்து அசுரனை விரட்டி அடிப்பது போன்று வீதியில் உலா வருவது வழக்கம். இந்த வருடம் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 
நெல், மிளகாய்
கிராம மக்கள் இதனை வரவேற்று கருப்பட்டி யுடன் கூடிய பச்சரிசியை பீமனுக்கும் திரவுபதி அம்மனுக்கும் அசுரன் வேடம் போட்ட இளைஞர்களுக்கும் வழங்கினர். அத்துடன் நெல், மிளகாய் போன்ற விவசாய பொருட்களை திரவுபதி அம்மன் கோவிலுக்கு வழங்கினர். விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Next Story