அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 130 பேர் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு விரைந்தனர்
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 130 பேர் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு விரைந்தனர்
அரக்கோணம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் மற்றும் கன மழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் அடிபடையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 130 பேர், துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் அதிநவீன மீட்புப் கருவிகளுடன் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்தனர்.
Related Tags :
Next Story