ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி


ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 March 2022 6:43 PM IST (Updated: 18 March 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியை வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி

திருச்சி, மார்ச்.19-
ஸ்ரீரங்கம் மேல உத்தர வீதியை சேர்ந்தவர் சாரநாதன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 53). இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீரங்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த 14-ந் தேதி விஜயலட்சுமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் வங்கியில் அவருடைய தகவல்களை (கே.ஒய்.சி.) அப்டேட் செய்ய வேண்டும் என்றும், அதற்காக அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியை கிளிக் செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து விஜயலட்சுமி அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்து அதில் கூறியுள்ளபடி ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 700 எடுக்கப்பட்ட தகவல் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆன்லைன் மூலம் சோதனை செய்தார். அதில் போலியான இணையதளம் மூலம் ம்ம நபர்மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story