தொண்டி மீனவர்கள் 6 பேர் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தொண்டியை சேர்ந்த 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தொண்டியை சேர்ந்த 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை பகுதியில் இருந்து கடந்த மாத இறுதியில் நாட்டுப் படகு ஒன்றில் 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டிருந்த தொண்டிபகுதியை சேர்ந்த 6 மீனவர்களும் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரவு
அப்போது 6 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டதுடன் படகின் உரிமையாளர் வருகிற 27-ந்் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் படகு அரசுைடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story