மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 2 போலீசார் நியமனம்


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 2 போலீசார் நியமனம்
x
தினத்தந்தி 18 March 2022 7:15 PM IST (Updated: 18 March 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 2 போலீசார் நியமனம்

திருச்சி, மார்ச்.19-
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளால் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரை தளத்தில் வைத்தே அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டுகளால் புகார் மனுக்களை நேரில் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தற்போது புகார் அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பயிற்சி பெற்ற 2 போலீசார் ஒவ்வொரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதும் பட்சத்தில் அவர்கள் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகங்கள் திருச்சி 0431-2333909 மற்றும் தஞ்சாவூர் 04362-277577 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவில்லைஎன்றுமாற்றுத்திறனாளிகள் கருதும் பட்சத்தில் அவர்கள் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலக தொலைபேசி எண் 0431-2333866 மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Next Story