கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம்


கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 18 March 2022 7:18 PM IST (Updated: 18 March 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

முத்தூர்:
முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வருவாய் கிராம பகுதிகளை சேர்ந்த  கிராம பொதுமக்கள் பயன் பெறுவதற்கான 2-ம் கட்ட கணினி பட்டா திருத்தம் மற்றும் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் முத்தூர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
முகாமிற்கு காங்கேயம் தாசில்தார் ஆர்.ஜெகதீஷ்குமார் தலைமை தாங்கினார். முத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் மு.க.அப்பு, மண்டல துணை தாசில்தார் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் காங்கேயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டு  பொதுமக்களிடம் இருந்து பட்டா பெயர் திருத்தம் செய்வதற்கு 4 மனுக்களும், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதலுக்கு 6 மனுக்களும், இலவச வீட்டுமனை பட்டா கோரிக்கைக்கு 2 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரிக்கைக்கு 5 மனுக்களும், ஆட்சேபனை புகார் கோரிக்கைக்கு 1 மனுவும் என மொத்தம் 18 கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டனர். 
முடிவில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு முகாமிலேயே பட்டா மாறுதல் செய்து வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார் (முத்தூர்), கவிதாமணி (சின்னமுத்தூர்), சதீஷ்குமார் (ஊடையம்) மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story