திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3½ கோடியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் 7 ஆயிரம் தலைப்புகளில் வினியோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.3½ கோடியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் 7 ஆயிரம் தலைப்புகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழக இளைஞர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நூலகங்களில் பொதுஅறிவு புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே அரசு போட்டி தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து அதிக அளவில் வினாக்கள் கேட்கப்பட்டன. இதனால் நூலகங்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாணவர்கள், இளைஞர்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் ஆண்டு தோறும் நூலகங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதையொட்டி மாவட்ட வாரியாக புதிதாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வந்து உள்ளன.
இதில் ஆன்மிகம், கதை, கவிதை, பொதுஅறிவு, இலக்கியம், சரித்திரம் உள்பட 7 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். இந்த புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு இருந்து 90 ஊர்ப்புற நூலகங்கள், 63 கிளை நூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story