தமிழக அரசுக்கு ப சிதம்பரம் பாராட்டு
தமிழக பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி உள்ள தமிழக அரசை பாராட்டுகிறேன் என்று சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை,
தமிழக பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி உள்ள தமிழக அரசை பாராட்டுகிறேன் என்று சிவகங்கையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பேட்டி
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று சிவங்கை வந்தார். சிவகங்கையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பதவியேற்றபின் 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். முழு ஆண்டிற்கான முதல் அறிக்கை. கல்வி, சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியும், சுகாதாரமும் தான் ஒரு நாட்டு மக்களின் இரு முக்கிய தேவைகள். நிதி ஒதுக்கிய முதல்வர், நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். குறிப்பாக பெண்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி உள்ளனர்.
ஆரோக்கிய வாழ்வு
அரசு பள்ளி பெண்கள் இடைநிற்றல் இன்றி உயர்கல்வி படிக்க மாதம் ரூ.1000 அறிவித்தது புரட்சிகரமானது. பெண்கள் கல்விக்கு பல சலுகை அறிவித்து உள்ளனர். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த புதிய மாவட்ட அரசு மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கியதை பாராட்டுகிறேன்.
கல்வியும், சுகாதாரமும் நல்வாழ்வு ஒதுக்கீடு என சொல்ல முடியாது. ஒரு வகையில் அது சமூக கட்டமைப்பு தான். இதனால் வேலைவாய்ப்பு, கல்வி பெறுவர், ஆரோக்கிய வாழ்வு பெறுவர், உயர்கல்வி, ஆரோக்கிய வாழ்வு பல மடங்கு பாக்கியம் தரும். மற்ற கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளனர். தனியார் முதலீடு, அரசு முதலீடு செய்யவும் நிதி ஒதுக்கியதால் வேலைவாய்ப்பு பெருகும்.
பாராட்டு
தேர்தல் அறிக்கையில் சொன்னபடி நல்வாழ்வு, வளர்ச்சி இரு கண்களை திறந்து பார்த்து நிதி ஒதுக்கியதற்கு பாராட்டு. நிதி மேம்பாட்டில் வருவாய் பற்றாக்குறையை ரூ.7,000 கோடி குறைத்துள்ளனர். நிதி பற்றாக்குறை அடுத்த ஆண்டு 0.7 சதவீதம் குறையும் என கூறுவதால் கடன் வாங்குவதை குறைக்கின்றனர்.
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 6.9, அடுத்த ஆண்டு 6.4 சதவீதமாக உள்ளது. தமிழக அரசு நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story