பள்ளி அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் பொதுமக்கள் அறிவிப்பு


பள்ளி அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் பொதுமக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2022 8:59 PM IST (Updated: 18 March 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. அங்கு மதுபானம் வாங்க வரும் சிலர், மது குடித்துவிட்டு மாணவ-மாணவிகள் முகம்சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் அவதியடைந்த மாணவர்கள், பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். 
மேலும் இதுகுறித்து அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், மல்லியம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, சிவஞானபுரம், குல்லிசெட்டிபட்டி, சொக்குபிள்ளைபட்டி உள்ளிட்ட 9 கிராமத்தில் உள்ள பெற்றோர், ஆசிரியர் கழகம் மற்றும் சமுதாய நல குழுவினர் சார்பில் டாஸ்மாக் கடைகயை அகற்றக்கோரி நிலக்கோட்டை, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் சில இடங்களிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில், தமிழகத்திலேயே பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவது அணைப்பட்டியில் மட்டும் தான். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. 

Next Story