முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்


முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 9:01 PM IST (Updated: 18 March 2022 9:01 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் பேரணி- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை:
ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து  முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்துப்பேட்டை பெரியக்கடை தெரு முகைதீன் பள்ளி திடலில் இருந்து புறப்பட்ட  பேரணி பங்களா வாசல், பட்டுக்கோட்டை சாலை, நியூ பஜார் பழைய பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார்். துணை ஒருங்கிணைப்பாளர் மர்சுக் அகமது வரவேற்றார்.   இதில் த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜா அலாவூதீன், ஜாமியா பள்ளி நிர்வாகி அப்துல் ரகுமான், இயக்க துணைச்செயலாளர் ஆரூரான் சாதிக், த.மு.மு.க. நகர தலைவர் அலீம் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ம.ம.க. மனித உரிமை அணி மாநில செயலாளர் வக்கீல் தீன் முகமது நன்றி கூறினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தால் திருத்துறைப்பூண்டி சாலையில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபட்டனர்.
----
Reporter : G. MANICKAM  Location : Tanjore - MUTHUPETTAI

Next Story