கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


கோத்தகிரியில் உருளைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 18 March 2022 9:55 PM IST (Updated: 18 March 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலை உயர்வால் கோத்தகிரி பகுதியில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கோத்தகிரி

கொள்முதல் விலை உயர்வால் கோத்தகிரி பகுதியில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

உருளைக்கிழங்கு சாகுபடி

கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டி களில் கடந்த சில வாரங்களாக நீலகிரி உருளைக்கிழங்குக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. எனவே கோத்தகிரி பகுதியில் விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனால் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

 சில இடங்களில் அறுவடைக்கு தயாரான உருளைக்கிழங்குகளையும் விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள்.  

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

1,000 கிலோ விதை கிழங்கு

ஒரு ஏக்கரில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய 1000 கிலோ விதை கிழங்கு தேவைப்படுகிறது. இயற்கை உரத்தை பயன்படுத்தி 45 கிலோ எடை கொண்ட ஒரு மூடை விதை கிழங்கை சாகுபடி செய்தால் 20 மூடை அறுவடை செய்யலாம். 

சாதாரண நிலத்தில் 10 மூடை கிடைக்கும். ஒரு ஏக்கரில் சாகுபடி முதல் அறுவடை வரை ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே விலை கிடைத்தால் ஏக்கருக்கு ரூ.4½ லட்சம் வரை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story