கலபுரகி அருகே இந்து-முஸ்லிம் வாலிபர்கள் இணைந்து கொண்டாடிய ஹோலி பண்டிகை
இந்து-முஸ்லிம் வாலிபர்கள் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடினர்
கலபுரகி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வாலிபர்கள், இளம்பெண்கள் வண்ண பொடியை ஒருவருக்கொருவர் பூசி ஹோலி பண்டிகை கொண்டாடினார்கள். கலபுரகி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து மற்றும் முஸ்லிம் வாலிபர்கள், சிறுவர்கள் சேர்ந்து ஹோலி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதாவது நேற்று மதியம் 1 மணியில் இருந்து இன்று மதியம் 1 மணிவரை 24 மணி நேரம் கலபுரகி மாவட்டம் டவுன், புறநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
கலபுரகி டவுன் மிலன் டவுன், ஜப்பல் பஜார், பிரகயபூரி, ஒக்கலகேரி, ரோஜா லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் இருந்தே இந்து வாலிபர்கள், முஸ்லிம் வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண, வண்ண பொடிகளை பூசியும், பல வண்ண நிறத்திலான தண்ணீரை ஊற்றியும் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். இன்று காலையிலும் அவர்கள் வண்ணம் பூசி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்கள். அப்போது இந்து, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரும் இந்த ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டு இருந்தனர்.
Related Tags :
Next Story