ஹிஜாப் குறித்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு கண்டனம் நாமக்கல்லில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் குறித்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு கண்டனம் நாமக்கல்லில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:
நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் தரமணி யாசர் கலந்து கொண்டு, இஸ்லாமிய மதத்தினர் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் இல்லை என கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளதை கண்டித்து முஸ்லிம்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் சிறுபான்மையினருக்கு அடிப்படை மனித உரிமைகளை கூட வழங்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு பயணிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி பூங்கா சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகா மணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story