ஊட்டியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிவு கலெக்டர் அம்ரித் தகவல்


ஊட்டியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிவு கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 18 March 2022 10:23 PM IST (Updated: 18 March 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஊட்டியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்

ஊட்டி

ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஊட்டியை  மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். 

200 ஆண்டுகள் நிறைவு

மலைமாவட்டமான நீலகிரியின் தலைநகராக உள்ள ஊட்டியை கடந்த 1892-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆங்கிலேயே முதல் கலெக்டர் ஜான் சல்லீவன் கண்டறிந்தார். அதன் பின்னர்தான் ஊட்டி கட்டமைக்கப் பட்டது. ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இங்கு சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:- 

மேம்படுத்த பல்வேறு திட்டங்கள்

ஊட்டி நகரை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி 200-வது ஆண்டை ஒட்டி நிகழ்ச்சிகள் நடத்தவும், சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்பு நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகத் துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

இதோடு இணைந்து ஊட்டி நகரை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை கவர ரூ.114 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகள் அதிகப்படுத்துவது, இசையுடன் நடன நீரூற்று போன்ற சிறப்பு திட்டங்கள் ஊட்டியில் செயல்படுத்த ஏற்கனவே திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.


நிகழ்ச்சிகள் நடத்த திட்டம்

இதுதொடர்பாக அனுமதி பெற்று திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து கருத்துகள் கேட்கப்பட இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உடன் இருந்தார். 


Next Story