தர்மபுரியில் கடைகளில் அலுவலர்கள் ஆய்வு காலாவதியான 50 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

தர்மபுரியில் கடைகளில் அலுவலர்கள் ஆய்வு காலாவதியான 50 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2022 10:41 PM IST (Updated: 18 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கடைகளில் அலுவலர்கள் ஆய்வு காலாவதியான 50 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது சில கடைகளில் 50 கிலோ காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் உணவு பொருட்களை பொட்டலமாக வழங்குவதில் உரிய விதிகளை பின்பற்ற வேண்டும். உணவின் தரத்தை நிர்ணயம் செய்யும் உரிம எண் உணவு பொட்டலங்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உணவு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Next Story