மண்வள அட்டை திட்டம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி


மண்வள அட்டை திட்டம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 18 March 2022 10:46 PM IST (Updated: 18 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மண்வள அட்டை திட்டம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள உலகுடையாம்பட்டு கிராமத்தில் மண்வள அட்டை திட்டம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர்கள் புஷ்பராணி, அன்பழகன், வேளாண்மை கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் காசி வரவேற்றார். 

இதில் மண்வள பாதுகாப்பு, எலி ஒழிப்பு, வேளாண்மை காடுகள் வளர்த்தல், இரட்டிப்பு வருவாய் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை பற்றி பேராசிரியர் சிவக்குமார் பயிற்சி அளித்தார். பயிற்சியில் உதவி விதை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், முகமது நாசர், பயிர் காப்பீட்டு அலுவலர்கள் ஏழுமலை, சிந்துஜா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story