தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பழுதடைந்த விளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு நடு ஆசாரிபள்ளத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டணி ராஜ், நடு ஆசாரிபள்ளம்.
நாய்கள் தொல்லை
பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து பெருவிளை செல்லும் சாலையில் தபால்நிலையம், ராஜலட்சுமி நகர் ஆகிய பகுதிகளிலும், பார்வதிபுரத்தில் இருந்து அனந்தன்பாலம் செல்லும் ஆற்றங்கரை சாலையிலும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனத்தில் செல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ்.டி.ராக்பெல்லர், பார்வதிபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் பாலமோர் சாலையில் ஒரு தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் அருகில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று முடிவடைந்து வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், சாலை சரியாக சீரமைக்கப்படாததால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
விபத்து அபாயம்
கோட்டாரில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் குழாய்கள் பதிக்கும் பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. ஆனால், அந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பி.நாதன், வடிவீஸ்வரம்.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு செல்லும் பாதையில் கருவூலத்தின் முன்பு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தேவைகளுக்காக தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஆட்டோ நிறுத்தத்தை வெளியே மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, குருசடி.
Related Tags :
Next Story