கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மகேந்திராவாடியில், சென்னை - பெங்களூரு விரைவு பாதை திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்யப்பட்டு, விசாரணை முடிந்து 8 மாதங்களாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்காமலும், இழப்பீடு வழங்காமலும் காலதாமதம் செய்து வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மகேந்திரவாடியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story