பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 18 March 2022 11:04 PM IST (Updated: 18 March 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளர்.

திருப்பத்தூர்

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமைவாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் பண முடிப்பும் வழங்க உள்ளது. மேற்கண்ட விருதுக்கு தகுதியான முன்மொழிவுகள், தேவையான ஆதரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் கடந்த 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டு இருந்தது. 

இந்தநிலையில் தனிநபர், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து தரமான முன்மொழிவுகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வாணியம்பாடி என்ற முகவரில் அணுகலாம்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Next Story