செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராக சுப்பையா பொறுப்பேற்பு
கடலூர் மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராக சுப்பையா பொறுப்பேற்றார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஜெயஅருள்பதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் கூடுதலாக கவனித்து வந்தார்.
இதற்கிடையில் கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றார்.
பின்னர் அவர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவருக்கு உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற செய்தி-மக்கள் தொடர்பு அலு வலர் சுப்பையா ஏற்கனவே சென்னை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story