விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்கள் பறிமுதல்


விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2022 11:12 PM IST (Updated: 18 March 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 14 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.

வெளிப்பாளையம்:
நாகை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, நல்லதம்பி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதி சீட்டு , தகுதி சான்று,  இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், அதிக நபர்களை ஏற்றி செல்வது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 பள்ளி வாகனங்கள், 3 இலகு ரக சரக்கு வாகனங்கள், 5 வேன்கள்,   ஆட்டோ, சரக்கு வாகனம்  ஆகிய 14  வாகனங்களை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 14 வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு வரியாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும்,  அபராத தொகையாக ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 500-ம் வசூல் செய்யப்பட்டது.

Next Story