நாகையில், கடற்கரை விளையாட்டு போட்டிகள்
நாகையில், கடற்கரை விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில், கடற்கரை விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அருண்தம்பு ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு போட்டிகள்
நாகை மாவட்ட அளவிலான கடற்கரை கைப்பந்து, கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை கபடி விளையாட்டு போட்டிகள் வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் நாகை புதிய கடற்கரையில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. கைப்பந்து அணிக்கு 2 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகளும், கால்பந்து அணிக்கு 5 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகளும் மற்றும் கபடி அணிக்கு 6 வீரர்கள் மற்றும் 6 வீராங்கனைகளும் அனுமதிக்கப்படுவர்.
சான்றிதழ்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெறும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ரூ.500-ம், 2-ம் இடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.350-ம், 3-ம் இடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.200-க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.
எனவே நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் அணிகள் மற்றும் விளையாட்டுக் கழக அணி வீரர்கள்- வீராங்கனைகள் அதிக அளவில் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story