பங்குனி உத்திரத்தையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி
வைத்தீஸ்வரன்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி மாத உற்சவம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று 10-ம் நாள் பங்குனி உத்திரத்தையொட்டி செல்லமுத்து குமாரசாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இதையடுத்து விநாயகர், தையல்நாயகி அம்மன், வைத்தியநாதசாமி ஆகியோர் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் மேலவீதியில் வீதிஉலா புறப்பட்டு, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக வலம்வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் குளத்தில் அஸ்திரதேவருக்கு, கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story