பல்ளூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பல்ளூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 18 March 2022 11:39 PM IST (Updated: 18 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

பல்ளூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளூர் ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்சியில் பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, கவுன்சிலர் சரஸ்வதி பார்த்திபன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story