வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தா.பழூர் வட்டார வேளாண் துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அட்மா திட்ட மேலாளர் விஜய் முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சியில் கோடை உழவு, மண் பரிசோதனை, விதை நேர்த்தி செய்தல், இயற்கை சார்ந்த உரங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து ஆடல், பாடலுடன் கலைக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அட்மா திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம், இயற்கை வேளாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் எடுத்துக் கூறப்பட்டது.
Related Tags :
Next Story