தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாசுபடும் குடிநீர்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள சேங்கை ஊரணி வடகரையில் மாடுகள் கட்டப்பட்டு வருவதினால் அவற்றின் கழிவுகள் ஊரணியில் கலந்து குடிநீர் மாசு அடைந்து வருகிறது. இதனால் அந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சேங்கை, புதுக்கோட்டை.
அகற்றப்படாத கட்டிட கழிவுகள்
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இருந்த பழுதடைந்த கட்டிடம் மாணவர்களின் நலன் கருதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. இவற்றில் விஷ ஜந்துக்கள் குடிபுக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பழையஜெயங்கொண்டம், கரூர்.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து சாலையை படர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மாத்தூர், புதுக்கோட்டை.
சுவரொட்டிக்கு தடை விதிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து முசிறி பிரிவு சாலை வரை சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக இந்த தடுப்புச்சுவர் மீது வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு நலன் கருதி கருப்பு, வெள்ளைக் கோடுகள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் சாலைப்பணியாளர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட துறையூர் நெடுஞ்சாலைத்துறையினர் புதுப்பித்தனர். அதில் விளம்பரம் செய்யக்கூடாது மீறினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த போதும் இந்த தடுப்புச்சுவரின் அழகை சீர்குலைக்கும் வகையில் அடையாளம் தெரியாத நபர்கள் சுவரொட்டி ஒட்டத் தொடங்கியுள்ளனர். எனவே துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து முசிறி பிரிவு சாலை வரை உள்ள தடுப்புச்சுவர் மீது வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கோடுகளின் மீது சுவரொட்டி ஒட்ட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன் நடேசன், துறையூர், திருச்சி.
சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்
திருச்சி- திண்டுக்கல் சாலை பகுதியில் குதிரைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் அவை சாலையில் படுத்துக்கொள்வதினால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதில் ஒரு சில குதிரைகள் கன்றுகளை ஈன்ற நிலையில் சுற்றுவதினால் அந்த கன்றுகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
தெருநாய்களால் தொல்லை
திருச்சி மாசிங்பேட்டை, கூனிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக நின்று ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க வருவதினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கூனிபஜார், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி காந்தி நகர் பகுதியில் உள்ள காலிமனையில் குப்பைகள் கொட்டப்படுவதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலிமனைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காந்திநகர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி பொன்னகர் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதினால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் மூடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளம் பெரிய அளவில் இருப்பதினால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னகர், திருச்சி.
Related Tags :
Next Story