பொதுமக்கள்-இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சிலை கடத்தல் வழக்கில் குருக்கள் கைது செய்யப்பட்டார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விசாலாட்சி உடனாகிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் நீண்டகாலமாக கோவில் குருக்கள் ஆக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலை தடுப்பு பிரிவு போலீசார் சீர்காழி அருகே நிம்மேலியில் உள்ள குருக்கள் சூரியமூர்த்தி என்பவரின் வீட்டிற்கு நேரில் சென்று வீட்டில் இருந்த கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பொருள்கள், கோவில் கருவறையின் பின்புறம் கணக்கில் வராத 2 சிலைகள் வைத்திருப்பதாக கூறி மேற்கண்ட பொருள்களை பறிமுதல் செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குருக்கள் சூரியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இதனை கண்டிக்கும் வகையிலும், குருக்கள் சூரிய மூர்த்தி மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரியும் நிம்மேலி கிராமமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி விஸ்வ ஹிந்து பரிஷத், தமிழ்நாடு பிராமணர் சங்கம், அகில பாரத இந்து மகா சபா, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்ய சங்கம், அகில பாரத மக்கள் சபா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story