ரூ.33 லட்சத்தில் 4 புதிய டயாலிசிஸ் எந்திரங்கள்


ரூ.33 லட்சத்தில் 4 புதிய டயாலிசிஸ் எந்திரங்கள்
x
தினத்தந்தி 19 March 2022 12:24 AM IST (Updated: 19 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் 4 புதிய டயாலிசிஸ் எந்திரங்கள் ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 4 புதிய டயாலிசிஸ் எந்திரங்கள் நிறுவப்பட்டு அதற்கான கூடுதல் சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சிவகுமார் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜசேகர் வரவேற்றார். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு புதிய டயாலிசிஸ் எந்திரங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 7 டயாலிசிஸ் எந்திரங்கள் உள்ளன. அதில் தினமும் 33 பேருக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மேலும் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய டயாலிசிஸ் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. விழாவில் நகரசபை தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story