லாரியில் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு


லாரியில் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 19 March 2022 12:36 AM IST (Updated: 19 March 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

சிப்காட் டாஸ்மாக் குடோனில் நின்ற லாரியில் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அன்னவாசல், 
மதுபான ஆலை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாகோட்டை மதுபான ஆலையில் இருந்து சரக்கு லாரி மூலம் மதுபான பெட்டிகளை ஏற்றி கொண்டு சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் இறக்கி அங்கிருந்து மாவட்டம் முழுவதும் விற்பனைக்காக அனுப்புவது வழக்கம்.
இந்தநிலையில் சிப்காட் குடோனுக்கு இறக்க வந்த லாரி ஒன்று குடோன் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த லாரியில் இருந்து 28 மதுபான பெட்டிகளை திருடிக்கொண்டு சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 720 ஆகும்.
போலீசார் வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லாகோட்டை மதுபான ஆலை மேலாளர் சீனிவாசன் வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் டாஸ்மாக் குடோனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளதால் மது பாட்டில்களை திருடி சென்றவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Next Story