ஆதார் அட்டை சிறப்பு முகாம்
தினத்தந்தி 19 March 2022 12:38 AM IST (Updated: 19 March 2022 12:38 AM IST)
Text Sizeஆதார் அட்டை சிறப்பு முகாம் நடந்தது.
தோகைமலை,
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஊராட்சி சமுதாய கூடத்தில் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் புதிய அட்டை விண்ணப்பித்தல், பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், பிறந்த தேதி, மாதம், ஆண்டு உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் வடசேரி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire