அரசு பள்ளியில் நாளை நடைபெறும் மேலாண்மைகுழு கூட்டத்திற்கு அழைப்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 19 March 2022 12:38 AM IST (Updated: 19 March 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நாளை நடைபெறும் மேலாண்மைகுழு கூட்டத்திற்கு அழைப்பு

கரூர்,
தாந்தோணி ஒன்றிய, ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதனையொட்டி மாணவர்களின் இல்லத்திற்கே சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியை அன்னம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பரமேஸ்வரன், தங்கபாண்டி ஆகியோர் பள்ளி மேலாண்மை கூட்ட அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தனர்.


Next Story