புகையிலை பொருட்களுடன் 5 பேர் கைது


புகையிலை பொருட்களுடன் 5 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2022 12:50 AM IST (Updated: 19 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புகையிலை பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் மூவரை வென்றான் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது உடன் உணவு பாதுகாப்புத் துறையை சேர்ந்த அலுவலரும் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது காருக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 33 மூடைகளில் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவரிடம் விசாரித்தபோது அவர் மொத்தமாக கொள்முதல் செய்து ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி (40) அம்மாபட்டியைச் சேர்ந்த சம்பத் (53), சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம், சிங்கம் ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நத்தம்பட்டி போலீசார் 5 பேரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 680 ஆகும்.


Next Story