12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 19 March 2022 12:57 AM IST (Updated: 19 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நொய்யல், 
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நொய்யலில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி, வேட்டமங்கலம் பாதகாளியம்மன்நகரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, முத்தனூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தியார் நடுநிலைப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார துறை மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பள்ளிகளில் பயிலும் ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் முதல் தவணை கொரோனா தடுப்பு ஊசி போட்டனர்.


Next Story