மொபட் மீது கார் மோதல்; விவசாயி பலி


மொபட் மீது கார் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 19 March 2022 1:00 AM IST (Updated: 19 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே மொபட் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.

நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 70), விவசாயி. இவர் நேற்று காலையில் சிறுமளஞ்சி ஊருக்கு சென்றுவிட்டு பெருமளஞ்சிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது, நெல்லையில் இருந்து வள்ளியூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் வேல்ராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வேல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story