வாலிபர் மர்ம சாவு


வாலிபர் மர்ம சாவு
x
தினத்தந்தி 19 March 2022 1:10 AM IST (Updated: 19 March 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருச்சி பாபு ரோடு நடு சானியா குளத் தெருவை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 36). இவரது மனைவி நாக லட்சுமி (33). இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வீட்டில் தண்ணீர் வராததால் நாகலட்சுமி மகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த விஜயராகவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story