தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2022 2:04 AM IST (Updated: 19 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடையநல்லூர்:
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளன. 
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாலை கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகம்மது ஒலி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் ஜலாலுதீன், துணைத்தலைவர் மசூது சாகிப், துணை செயலாளர்கள் ஹாஜா, பீர்முகமது, அன்வர் சாதிக், தொண்டரணி செயலாளர் புகாரி மற்றும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், பொன்னரசு, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜாராம், வேல்கனி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story