ரதி, மன்மதன் திருவிழா


ரதி, மன்மதன் திருவிழா
x
தினத்தந்தி 19 March 2022 2:10 AM IST (Updated: 19 March 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலத்தில் ரதி, மன்மதன் திருவிழா நடந்தது.

தாரமங்கலம்:-
தாரமங்கலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தையொட்டி ரதி, மன்மதன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா தாரமங்கலம் பழைய சந்தைபேட்டை பகுதியில் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ரதி, மன்மதன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து காமதகன நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மாலை பஸ் நிலையம் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்தி கரைத்து, பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து ரதி, மன்மதனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று (சனிக்கிழமை) மொச்சையை வேகவைத்து படைத்தல், தெருக்கூத்து நடக்கிறது. நாளை மன்மதனை எழுப்புதல், சிவபூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது.

Next Story